வாரணாசி: இந்தி நடிகை சன்னி லியோன், தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு , மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி விழாவில், கலந்து கொண்டு பூஜை செய்தார். பாரம்பரிய உடை அணிந்தபடி, கழுத்தில் மாலையுடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் நடிகருமான அபிஷேக் சிங்குடன் அவர் பூஜை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள சன்னி லியோன், “வாரணாசியில் கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டது மிகவும் அற்புதமான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.