பாலிவுட்

இந்தி நடிகரை காதலிக்கிறார் லேகா வாஷிங்டன்?

செய்திப்பிரிவு

தமிழில், ஜெயம்கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உட்பட சில படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக டைனமைட் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் இந்தி நடிகர் இம்ரான் கானை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் அறிமுகமான இம்ரான் கான், பிரபல நடிகர் ஆமிர்கானின் உறவினர். கடந்த 6 வருடங்களாகப் படங்களில் நடிக்காமல் இருக்கும் இம்ரான் கான், இப்போது லேகா வாஷிங்டனுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இசைக் கலைஞர் அனொஷ்கா ஷங்கர், பாடகி மோனிகா டோக்ரா, இந்தி நடிகர்கள் நடிகர் அபய் தியோல், அர்ஜுன் மாதுர் ஆகியோரும் உள்ளனர். லேகா வாஷிங்டனும் இம்ரான்கானும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT