பாலிவுட்

பத்மாவத் வெற்றி: ரிலீஸான 4 நாட்களில் வட அமெரிக்காவில் மட்டும் 4.9 மில்லியன் டாலர் வசூல் சாதனை

பிடிஐ

வரலாற்றுத் திரைப்படமான 'பத்மாவத்' வடமெரிக்காவில் வெளியான 4 நாட்களில் 4.9 மில்லியன் டாலர் குவித்து வசூலில் புதிய சாரதனை படைத்துள்ளது.

பத்மாவத் திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதுவம் 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி ஆகிய வடிவங்களில் 326 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வடமெரிக்காவில் மட்டும் வெளியான 4 நாட்களில் 4.9 மில்லியன் டாலர் குவித்துள்ளது. அவ்வகையில் வசூலில் புதிய சாதனையை பத்மாவத் பாலிவுட் திரைப்படம் படைத்துள்ளது.

இதுகுறித்து பாலிவுட் குரு இணையதளம் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:

சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், வார இறுதியில் மிகப்பெரிய தொடக்கத்தோடு வெளியானது. இத்திரைப்படம் வெள்ளி முதலில் ஞாயிறுவரையிலான மூன்று நாட்கள் மட்டும் வட அமெரிக்கா முழுவதும் 4.4 மில்லியனுக்கும் மேலான வசூலைக் குவித்து இதுவரையிலான பாலிவுட் திரைப்பட சாதனைகளை முறியடித்துள்ளது.

மேலும் வியாழனிலிருந்து ஞாயிறு வரையிலான நான்கு நாட்களில் 4.9 அமெரிக்க டாலர்களைக் குவித்துள்ளது.

இங்கு வழக்கமாக ரிலீஸாகும் இந்திப் படங்கள் வெளியாகி ஓடும் மொத்தநாட்களின் வசூல் தொகைகூட இவ்வளவு இல்லை.'' என்று திரைப்படத்திற்கான இணையதளமான பாலிவுட் குரு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் வடஅமெரிக்காவில் பெரிய அளவில் வசூலைக் குவித்த படம் அமீர்கானின் பி.கே. அதன் முதன் மூன்று நாட்கள் வசூல் மட்டும் 3.6 அமெரிக்க டாலர்கள். அமீர்கானின் பிளாக் பஸ்டர் திரைப்படமான டங்கல் முதல் 5 நாட்களில் வசூலான தொகை 4.1 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானது.

இச்சாதனைகளை பத்மாவத் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் படம் வெளியான ஜனவரி 27 அன்றைய வசூல் தொகை மட்டும் 1.85 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ஒரேநாளின் மிகப்பெரிய சாதனை என்றும் பார்க்கப்படுகிறது.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடித்து, பாலிவுட்டில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய எதிர்ப்பையும் கண்டனங்களையும் சந்தித்தது. இதனால் இப்படம் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. கடந்த வெள்ளியன்று ரிலீஸான பத்மாவத் வசூல் ரீதியாகவும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது திரைப்படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT