பாலிவுட்

போலி கைது வீடியோ: நடிகை உர்ஃபி ஜாவேத் மீது வழக்கு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத். அடிக்கடி கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் இவர் ஈடுபடுவது வழக்கம். இதற்காக அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றியதாக நடிகை உர்ஃபி ஜாவேத்தை மும்பை போலீஸார் கைது செய்ததாக இணையத்தில் வீடியோ வைரலானது. இந்த வீடியோ குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் விளம்பரத்துக்காக இதுபோன்ற கைது நாடகத்தை அரங்கேற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உர்ஃபி ஜாவேத் மீது மும்பை ஓஷிவாரா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 171, 419, 500, 34 ஐபிசி பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT