பாலிவுட்

ரூ.5 கோடியில் சொகுசு கார்: பூஜா ஹெக்டே மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘முகமூடி’ மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த அவர், ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்தில் நடித்த அவர், இந்தியில் சல்மான் கான் படத்தில் நாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து வரும் பூஜா ஹெக்டே, இப்போது இந்தியில் ஷாகித் கபூர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரான இதன் விலை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. அதிக வசதிகள் கொண்ட இந்த காரை பூஜா வாங்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT