பாலிவுட்

சினிமாவாகிறது லாலு பிரசாத் வாழ்க்கை

செய்திப்பிரிவு

அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது தற்போது அதிகமாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாகி இருக்கின்றன.

இப்போது பிஹார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது.

“கடந்த 5-6 மாதங்களாக இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி பிரசாத், இதற்கு நிதியுதவி செய்கிறார். பிரகாஷ் ஜா தயாரிக்கிறார். லாலு பிரசாத்தாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT