பாலிவுட்

முத்தக் காட்சியில் நடிக்க அதிக சம்பளம் கேட்டாரா ராஷ்மிகா?

செய்திப்பிரிவு

மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ என்ற இந்திப் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இதைத் தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இதன் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

இதில் முத்தக் காட்சிகளில் ராஷ்மிகா நடித்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் காட்சியில் நடிப்பதற்காக ராஷ்மிகா கூடுதல் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தரப்பில் இதை மறுத்துள்ளனர். முத்தக்காட்சிக்காக ராஷ்மிகா அதிக சம்பளம் கேட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று அவர் தரப்பு தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT