பாலிவுட்

இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டியில் ஊர்வசி ரவுதெலாவின் தங்க ஐபோன் மாயம்

செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா, தமிழில் சரவணன் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியை இந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் கண்டு களித்தனர். நடிகை ஊர்வசி ரவுதெலாவும் பார்த்தார்.

இந்நிலையில் இந்தப் போட்டியின்போது, தனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டதாக ஊர்வசி தெரிவித்துள்ளார். “அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் போனை தொலைத்துவிட்டேன். யாராவது கண்டெடுத்தால் விரைவில் என்னைத் தொடர்பு கொள்ளவும்” என்று பதிவிட்டுள்ள அவர், அகமதாபாத் போலீஸுக்கும் டேக் செய்துள்ளார். போலீஸார், போன் விவரங்களை அவரிடம் கேட்டுள்ளனர்

SCROLL FOR NEXT