தன்னுடன் இணைந்து நடித்த கேத்ரினா கைஃபே 'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று சல்மான் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
அலி அப்பாஸ் சஃபார் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது.
படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இதற்கிடையே தன்னுடைய 52-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார் சல்மான். இதை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சல்மான், ''என்னுடைய பிறந்த நாள் பரிசாக படத்துக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார் கேத்ரினா.
'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம்தான். அது கேத்ரினா கைஃப்'' என்றார்.
படத்தின் வசூல் முதல் வாரத்தின் முடிவில், ரூ.200 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.