மும்பை: தமிழில், விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்தியாவில் முதன் முதலாக, மீ டூ-வில் புகார் கூறியிருந்தது இவர்தான். திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் தனுஸ்ரீ தத்தா, கூறியிருப்பதாவது:
திருமணத்தைப் புனிதமான பந்தமாக நினைக்கிறேன். இரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளும்போது அவர்களின் ஆன்மா ஒன்று சேர்கிறது. நான் என் உணர்ச்சிகளை முதலீடு செய்ய விரும்பவில்லை. நான் சரியான நபரை சந்திக்காததால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னை காதலிக்க அனுமதித்ததில்லை. ஆனால் இப்போது காதலுக்காக மெதுவாக மனம் திறக்கிறேன். நான் முன்பு அதிகம் பொறாமை கொண்டிருந்தேன். அப்போது என் தோழனாக இருந்தவருக்கு, இது தெரியும். வேண்டுமென்றே என்னைப் பொறாமைப்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார். அவர் என் முன்னால் பெண்களுடன் சுற்றுவார். தொடர்ந்து என்னை அந்த நிலையில் வைத்திருக்க விரும்பினார். அவருக்கு முதிர்ச்சியில்லை என்பதை தெரிந்து கொண்டேன். அவர் பாதுகாப்பற்றவராக இருந்ததால்தான் அவ்வாறு செய்கிறார் என்பதை அறிந்து விலகினேன். இப்போது அதில் இருந்து காதலிக்கும் மனநிலைக்கு வந்திருக்கிறேன்.
இவ்வாறு தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார்