பாலிவுட்

படப்பிடிப்பில் பாலியல்தொல்லை: நடிகை ஈஷா குப்தா புகார்

செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை ஈஷா குப்தா. தமிழில் ‘யார் இவன்’ என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது, இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இயக்குநர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். ஆனால் மறுத்துவிட்டேன். பாதி படம் முடிந்தபின் மீண்டும் தொல்லையைத் தொடர்ந்தார். படத்தில் இருந்து நீக்கப்படுவேன் என்று இணைத் தயாரிப்பாளர் கூறினார்.

நான் மறுத்துவிட்டதால், மேலும் சில திரைப்படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டன. இதனால் வாய்ப்பு கிடைக்காமல் போனது. மற்றொரு படத்தில், வெளியூர் படப்பிடிப்பின் போது நான் அவர்கள் வலையில் விழுந்துவிடுவேன் என்று நினைத்தனர். அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டதால், நான் என் மேக்கப் கலைஞரை என் அறையிலேயே தங்க வைத்துக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT