என் சம்பளத்தை உங்களிடம் கூறினால் நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் முகேஷ் அம்பானியின் மகன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருபாய் அம்பானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில், பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் தொகுப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியுடன் ஷாருக்கான் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டார்.
இந்த உரையாடலில் ஷாருக்கான் "நான் எனது முதல் சம்பளமாக 50 ரூபாயைப் பெற்றேன்... உங்களது முதல் சம்பளம் என்ன? "என்று கேட்டார், அதற்கு ஆனந்த் அம்பானி
"என் சம்பளத்தை உங்களிடம் கூறினால் நீங்கள் தர்ம சங்கடமாக உணர்வீர்கள்" என்றார்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றி குறித்து கூறும்போது, ''ரிலையன்ஸில் நாங்கள் அனைத்தையும் எளிமையாக வைத்திருக்கிறோம். நாங்கள் தகுதியை மதிக்கிறோம். நாங்கள் தலைமைத்துவத்தை மதிக்கிறோம். நாங்கள் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்'' என்று தெரிவித்தார்.