பாலிவுட்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்: அபிஷேக் பச்சன்

செய்திப்பிரிவு

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு தற்போது தான் அடிமையாகிவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் சமீபத்தில் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு தரப்பினரும் தங்களுடைய குழுவினரோடு இப்பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்பாடலை தற்போதுவரை யூடியூப் தளத்தில் 52 கோடி பேர் பார்த்துள்ளனர். அவ்வப்போது பிரபலங்களும் இப்பாடலை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர, அதை அவர்களின் ரசிகர்களும் பகிர்ந்து வந்தனர்.

அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலை பதிவிட்டு, ''ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு தற்போதைக்கு அடிமையாகிவிட்டேன். கேட்பதை நிறுத்த முடியவில்லை. அருமையாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT