பாலிவுட்

உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாளா? - ட்விட்டரில் வந்த கிண்டல் பதிவுக்கு அபிஷேக் அளித்த பக்குவ பதில்

செய்திப்பிரிவு

 பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்ய ராய் தம்பதியினரின் மகளான ஆராதயாவை குறிப்பிட்டு உங்கள் மகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறாளா என்று ட்விட்டரில் பெண் ஒருவர் கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

ஷேரின் பட்டேயன் என்ற பெண், அபிஷேக், ஐஸ்வர்யாவின் மகளான ஆராதயாவைக் குறிப்பிட்டு, ''உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாளா? பள்ளிக்கூடம் எப்படி உங்கள் குழந்தைக்கு எப்போதும் அவரது தாயாரோடு சுற்றுலா செல்ல அனுமதிக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது. இல்லை அறிவில்லாமல் வெறும் அழகோடு உங்கள் மகள் இருக்க விரும்புகிறீர்களா.. எப்போது ஒரு கர்வம் பிடித்த அம்மாவின் கைக்குள்ளே இருக்கிறார் உங்கள் மகள். அவளுக்கு சராசரியான குழந்தைப் பருவம் கிடைக்கவில்லை'' என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அபிஷேக், ''மேம்... எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான பள்ளிகள் வார இறுதியில் விடுமுறைகள் விடும். எனது மகள் எப்போதும் பள்ளி நாட்களில் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறாள். நீங்கள் உங்கள் ட்விட்டீல் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டார்.

அபிஷேக்கின் பக்குவமான இப்பதிவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT