பாலிவுட்

ராதிகா ஆப்தேவை பாராட்டிய அம்பேத்கரின் பேரன்

செய்திப்பிரிவு

மும்பை: அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நடிகை ராதிகா ஆப்தேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரது ட்விட் வைரலாகி வருகிறது.

ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. அவரின் ‘மேட் இன் ஹெவன் 2’ வெப்சீரிஸ் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் நடிகை ராதிகா ஆப்தே, தலித் மணப்பெண்ணாக பல்லவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் ராதிகா ஆப்தே நடித்துள்ள பகுதிகளின் புகைப்படங்களை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பல்லவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தலித் பெண்ணின் உறுதி, எதிர்ப்பு பிடித்திருக்கிறது.

இந்த எபிசோடை பார்க்கும் வஞ்சிட்ஸ், பகுஜன்கள் உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும். எல்லாமே அரசியல் தான். ஜெய் பீம்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT