பத்மாவதி தொடர்பாக தீபிகா, சஞ்சய்லீலா பன்சாலிக்கு வரும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனே ஆகியோரின் தலையைக் கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவேன் என சூரஜ் பால் அறிவித்தது பாலிவுட் திரையுலங்கினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய, திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலி நானா படேகர் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நானா படேகர் கூறும்போது, “தீபிகா, பன்சாலிக்கு வரும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. பத்மாவதி திரைப்படம் இன்னும் திரைக்கே இன்னும் வராத சூழலில் படத்தில் என்ன காட்டப்பட்டுள்ளது என்று எதிர்ப்பாளர்கள் எதிர்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.