நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம், தமிழ், தெலுங்கை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. முன்னதாக தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் நடிப்பில், ‘போலா ஷங்கர்’, ‘ரிவால்வர் ரீடா’, ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘கண்ணிவெடி’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருண் தவான் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை காலீஸ் இயக்குகிறார்.
‘VD18’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.