பாலிவுட்

சினிமாவாகிறது பிரபல நடிகையின் வாழ்க்கை கதை

செய்திப்பிரிவு

மும்பை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா.மும்பையை சேர்ந்த இவர், தமிழ், இந்தி,தெலுங்கு உட்பட பல்வேறு மொழிபடங்களில், ஆடை வடிவமைப்பாளராகபணியாற்றியுள்ளார். தமிழில், ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘புலி’ படங்களில் பணியாற்றியுள்ள இவர், இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

பழம்பெரும் இந்தி நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட்ட இருக்கிறது. இந்தி சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த மீனா குமாரி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், தனது 38 வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகை மீனா குமாரியின் வாழ்க்கைக் கதையில் கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மனீஷ் மல்ஹோத்ரா இயக்க இருக்கிறார். டி-சீரிஸ் சார்பில் பூஷன்குமார் தயாரிக்கிறார்.

SCROLL FOR NEXT