ராஷ்மிகா மந்தனா 
பாலிவுட்

ராஷ்மிகா படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: விஜய தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் கவனம் பெற்ற தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இப்போது இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ளனர். அப்பா–மகன் இதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஆக.11ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையாததால், இதன் ரிலீஸ், டிச. 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆக.10-ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படமும், ஆக.11-ம் தேதி சிரஞ்சீவி நடித்துள்ள ‘போலா சங்கர்’ படமும் வெளியாக இருக்கின்றன.

SCROLL FOR NEXT