படத்தின் போஸ்டர் 
பாலிவுட்

'72 ஹூரைன்' தீவிரவாதம் பற்றிய படம்தான்: இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

‘லாகூர்’ என்ற இந்திப் படத்தை இயக்கிய சஞ்சய் பூரன் சிங் சவுகான் இப்போது இயக்கியுள்ள படம், ‘72 ஹூரைன்’ (72 கன்னிகள்). ஆமிர் பஷிர், பவன் மல்ஹோத்ரா, ரஷித் நாஜ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது. இந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. படத்தின் முதல் தோற்றம் வெளியான போதே சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப்படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை குழு சான்றிதழ் தர முதலில் மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போது கிடைத்தது. இந்த டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள், இளைஞர்களை எவ்வாறு மூளைச் சலவைச் செய்து தீவிரவாத செயலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் பேசுகிறது. “இது தீவிரவாதம் பற்றி பேசும்படம்தான். இதில் எந்த சமூகத்தையும் இணைக்க வேண்டாம்” என்று இயக்குநர் சஞ்சய் பூரன் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT