மும்பை: நடிகை பிரியாமணி, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமூக வலைதள ‘ட்ரோலிங்’கால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என் நிறத்துக்காக நான் இன்னும் விமர்சிக்கப்படுகிறேன். ஆனால், முஸ்தபா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தேன். நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டபோது, மதரீதியாக பலர் என்னை வசைபாடினர். இப்படி கருத்துச் சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இது என் வாழ்க்கை. அதை யாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது முழுக்க என்னைப் பொறுத்தது” என்றார்.