பாலிவுட்

காலில் விழுந்த ரசிகர்: கண்கலங்கிய தமன்னா

செய்திப்பிரிவு

மும்பை: நடிகை தமன்னா சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். ரசிகர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். அதில் ஒரு ரசிகர், அவர் காலில் விழுந்தார். இதை தமன்னா எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவருக்குப் பூங்கொத்து கொடுத்த அவர், தமன்னாவின் முகத்தை கையில் பச்சை குத்தியிருந்ததைக் காண்பித்தார். அதைக் கண்டதும் கண்கலங்கிய தமன்னா, அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறி நெகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT