பாலிவுட்

'தி கேரளா ஸ்டோரி'யை வாங்க முன் வராத ஓடிடி நிறுவனங்கள்

செய்திப்பிரிவு

மும்பை: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’ . இந்தியில் உருவான இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது.

இந்நிலையில் இதை எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்க முன் வரவில்லை என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. “இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் குவித்தாலும் இதன் கதை மற்றும் தலைப்பு குறிப்பிட்ட பிரிவினரிடையே கோபத்தை ஏற்படுத்தும் ஒன்று. அதனால் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்பதால் அதை வாங்கவில்லை” என்று முன்னணி ஓடிடி தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT