மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், ‘ஜவான்’. இதில் அவர் 2 வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படம் செப்.7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
ஷாருக்கான் நடித்த ‘பதான்’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, “ஜவான் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த படைப்பு. இதில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஜவானில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்” என்றார்.