பாலிவுட்

வாய்ப்புக்காக நடிகைகள் சமரசம் செய்து கொள்வது வருத்தமாக இருக்கிறது: நடிகை ரிச்சா சட்டா

பிடிஐ

வாய்ப்புகளுக்காக சமரசம் செய்துகொள்வது, போலியான உறவுகளில் இருப்பது என திரைத்துறையின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாக பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா கூறியுள்ளார்.

கேங்க்ஸ் ஆஃப் வசேபூர், ஓய் லக்கி ஓய், மசான், சரப்ஜித் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரிச்சா.

பாலிவுட் பற்றி அவர் பேசுகையில், "இங்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம். இங்கிருப்பவர்கள் விசித்திரமாகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் நான் மன உளைச்சலுக்கு ஆளாவேன். கடினமாக இருக்கும். வாய்ப்புகளுக்காக, தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிக்க தயாராக இருக்கும் பெண்களை நினைத்தால் கோபமாக இருக்கிறது.

அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் தான். நீங்கள் வேகமாக முன்னுக்கு வர அப்படி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அப்படி செய்வதால் அவர்கள் எல்லோரிடமும் அதை எதிர்பார்க்கின்றனர்.

அரசியல், போலி நட்புகளாலும் பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஏதாவது நடிகை நமக்கு நட்பாவார். அவருடன் நேரம் செலவிடுவோம். அடுத்து நாம் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் பற்றி அவர் தெரிந்து கொள்வார். பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் சென்று, நான் ரிச்சாவை சந்தித்தேன். அவருக்கு உங்கள் படத்தின் மீது ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால் நான் ஆர்வமாக இருக்கிறேன் என்பார். நம்மை விட குறைவான சம்பளம் பேசி அந்த வாய்ப்பை நம் கண் முன்னே தட்டிப் பறிப்பார்.

அது மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுடன் உறங்கவும் அவர்கள் தயாராக இருப்பார்கள். நான் பல வாய்ப்புகளை இப்படி இழந்திருக்கிறேன்." என்றார்.

SCROLL FOR NEXT