குடியரசுத் தலைவருடன் வருண் தவண் மற்றும் சமந்தா 
பாலிவுட்

செர்பியாவில் குடியரசுத் தலைவரை சந்தித்த சமந்தா, வருண் தவண்

செய்திப்பிரிவு

நடிகை சமந்தா தற்போது, ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். ‘தி பேமிலிமேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கும் இதில் வருண் தவண் நாயகனாக நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஆங்கில ‘சிட்டாடெல்’ வெப் தொடரின் இந்திய பதிப்பு இது. இதில் பிளாஷ்பேக் காட்சியில், பிரியங்காவுக்குத் தாயாக சமந்தா நடிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு இப்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் செர்பியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ‘சிட்டாடெல்’ குழுவினர் சந்தித்துள்ளனர். வருண் தவண், சமந்தா உள்ளிட்ட குழுவினர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT