சிவகார்த்திகேயன்

 
சினிமா

‘பராசக்தி’ படத்தின் நோக்கம் இதுதான்... - சிவகார்த்திகேயன் விவரிப்பு

தமிழினி

சென்னை: “நமது முன்னோர்கள் மொழிக்காக, தமிழுக்காக செய்த இவ்வளவு பெரிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ‘பராசக்தி’ படத்தின் நோக்கம்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பராசக்தி படம் பார்த்த பின் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியது: “பராசக்தி படம் நன்றாக இருப்பதாக அனைவரும் கூறினார்கள். எங்களுக்கு இந்த படம் எடுத்ததே ஒரு எமோஷனலான பயணம் தான். அந்த எமோஷனல் கதையிலும் இருக்கிறது. இது, மக்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

பராசக்தி பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டதுதான். நமது முன்னோர்கள் மொழிக்காக, தமிழுக்காக செய்த இவ்வளவு பெரிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம்.

ஜனநாயகன் எப்போது வருகிறதோ அன்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். அது ரசிகர் பாயின்ட் ஆஃப் வியூவில் மட்டுமல்ல, சினிமா துறைக்கும், தியேட்டருக்கும் மிக முக்கியமான படம். கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என நம்புகிறேன். நல்லதே நடக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT