விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 
சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியானது. இதையடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வந்த நிலையில், அது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளது.

“மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து மூன்றாவது முறையாக நாங்கள் விஜய் உடன் இணைந்துள்ளது மகிழ்ச்சி. இப்போதைக்கு இந்தப் படம் ‘விஜய் 67’ என அறியப்படும். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லலித் குமார் தயாரிக்கிறார். ஜகதீஷ் பழனிசாமி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். ஜனவரி 2-ம் தேதி முதல் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் இது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களை அடுத்து அனிருத் ‘விஜய் 67’ படத்திற்கு இசையமைக்கிறார்.

  • ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
  • ஆக்‌ஷன்: அன்பறிவ்
  • படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்
  • கலை: சதீஷ் குமார்
  • நடனம்: தினேஷ்
  • வசனம்: லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி

இந்தப் படத்தின் மேற்கொண்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT