சினிமா

ராம் சரண் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய ஷங்கர்

செய்திப்பிரிவு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, ஷங்கர், தெலுங்கு ஹீரோ ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார். இதற்கிடையில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்னை பேசி முடிக்கப்பட்டது.

இதையடுத்து ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிக்கும் படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். கடந்த சில நாட்களாக ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், நேற்று முதல் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ராஜமுந்திரியில் ஷங்கர் தொடங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT