சினிமா

பழம்பெரும் நடிகை ஜெய்க்குமாரிக்கு சிறுநீரகங்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

தமிழில், ‘நாடோடி’, ‘அனாதை ஆனந்தன்’, ‘மன்னவன்’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘காசேதான் கடவுளடா’ உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஜெய்க்குமாரி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT