நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ படம் மூலம் இயக்குநர் ஆனார். இப்போது‘மா.பொ.சி’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். இதில் விமல், சாயாதேவி, சரவணன், ரமா உட்பட பலர் நடிக்கின்றனர். சிராஜ் தயாரிக்கிறார். இனியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசை அமைக்கிறார்.
படம்பற்றி போஸ் வெங்கட் கூறும்போது, ‘‘மா.பொ.சி என்றதும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் (ம.பொ.சி) பெயர் தான் நினைவிற்கு வரும். அதற்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் இல்லை. படத்துக்கு மா.பொ.சி. என்று தலைப்பு வைத்ததில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
’மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம், அது பெரிதாக இருப்பதால் சுருக்கி, மா.பொ.சி. என்று வைத்தோம். இது,கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம்’’ என்றார்.