மும்பை: நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் கூட்டணியில் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சுமார் 1.54 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த டீசர்.
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 வாக்கில் தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் வேதா. இந்த படம் அப்போது பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. தமிழில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்கள் இருவரையும் தழுவியே படத்தின் கதை மற்றும் காட்சிகள் நகரும்.
மேக்கிங், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு என அனைத்திலும் பார்வையாளர்களை இந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இந்த படத்தை அப்படியே இந்தி மொழியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் வேதா கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். செம வெயிட்டான கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படத்தில் வருவதைப் போலவே இருவரும் தங்கள் பாத்திரத்திற்கான பவரை திரையில் தங்கள் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி முயற்சி செய்துள்ளனர். புஷ்கர் - காயத்ரி தம்பதியர் இந்த ரீமேக் படத்தை இயக்கியுள்ளனர். வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.