டி. பாலமுரளி 
சினிமா

திரைப்பட சான்றிதழ் வாரிய மண்டல அதிகாரி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக டி.பாலமுரளி நேற்று பொறுப்பேற்றார்.

தஞ்சை மாவட்டம், பொன்னவராயன் கோட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலமுரளி. 2012-ல் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று, கேரளா தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரியானார். பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்தார். அத்துடன், கேரள சுற்றுலா மேம்பாட்டுகழகம், கேரள மருத்துவ சேவைக்கழகம் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார்.

கேரளாவின் ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராகவும், உள்ளாட்சி நிர்வாக முதன்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். இத்தகவலை பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT