சினிமா

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா : நடுவர் குழு அறிவிப்பு

செய்திப்பிரிவு

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான நடுவர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நடைபெறும். 2020-ம் ஆண்டிற்கான திரைப்பட விழா கரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது.

51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் சேர்த்து இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.

இதில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய மொழிப் படத்துக்குத் தேசிய விருதும் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான நடுவர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகெங்கும் உள்ள பிரபல திரைப்படத்துறையினர் சர்வதேச நடுவர் மன்ற குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

பப்லோ சீசரின் (அர்ஜென்டினா) தலைமையிலான குழுவில் திரு பிரசன்னா விதானாஜே (இலங்கை), அபு பக்கர் ஷாகி (ஆஸ்திரியா), பிரியதர்ஷன் (இந்தியா), ருபையாத் ஹொஸைன் (வங்கதேசம்) ஆகியோர் இடம் பெறுவார்கள்.

SCROLL FOR NEXT