சினிமா

யூடியூப் தளத்தில் புதிய சாதனை படைத்துள்ள அலா வைகுந்தபுரம்லோ

செய்திப்பிரிவு

யூடியூப் தளத்தின் ஒட்டுமொத்த படத்தின் பாடல்கள் பார்வைகள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது 'அலா வைகுந்தபுரம்லோ'

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயர் பெற்றது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதிலிருந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. டிக் டாக் வீடியோக்கள், யூடியூப் பார்வைகள் என அனைத்திலுமே பல்வேறு சாதனைகளை உடைத்தது.

தற்போது, யூடியூப் தளத்தில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது தென்னிந்தியாவில் வெளியான படங்களின் ஒட்டுமொத்த பாடல்களின் பார்வைகளைக் கடந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

'புட்டபொம்மா' பாடல் சாதனை, வசூல் சாதனை, டி.ஆர்.பி சாதனை என இந்தப் படத்தின் தொடரும் சாதனைகள் பட்டியலில் ஒட்டுமொத்த பாடல்கள் பார்வைகளும் சேர்ந்துள்ளது. இந்தச் சாதனையால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT