சினிமா

சென்னை பட விழா | தேவி | டிசம்.18 | படக்குறிப்புகள்

செய்திப்பிரிவு

காலை 11.00 மணி | X - THE EXPLOITED | X - RENDSZERBOL TOROLVE | DIR: KAROLY UJJ-MESZAROS | HUNGARY | 2018 | 114'

ஹங்கேரியில் கடந்த காலத்தில் மக்களை வேட்டையாடிய வரலாற்றை இப்படம் ஆராய்கிறது. இருண்ட கம்யூனிஸ்ட் வேர்களைக்கொண்ட காலங்களில் நடந்த தற்கொலைகள் பலவும் கொலைகளா என்பதை மறுபரிசீலனை செய்ய இருவேறு குழுக்கள் துப்பறியும் பணியில் ஈடுபடுகின்றன. இப்படத்தில் ஹங்கேரிய போலீஸ் துப்பறியும் ஈவா பாடிஸின் திறன்மிக்கப் பணிகள் மிகவும் சிறப்பானது. ஈவானின் கணவர் இறந்தது தற்கொலையல்ல என உணரும் ஈவா தனது தற்காலிக புதிய கூட்டாளியுடன் தங்கள் நாட்டின் இருண்ட கம்யூனிஸ்ட் கடந்த காலங்களில் வேர்களைக் கொண்ட ஒரு மோசமான சதியை சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக மறைக்கப்பட்ட மற்றும் கொடூரமான குற்றங்கள் வெளிப்படுகின்றன.

பிற்பகல் 2.00 மணி | SICK SICK SICK | SEM SEU SANGUE | DIR: ALICE FURTADO | BRAZIL / FRANCE / NETHERLANDS | 2019

ஆழ்ந்த சிந்தனை கொண்டவள் சில்வியா. அவள் குடும்பம், பள்ளி என்ற தினசரி வாழ்க்கையில் நாட்டமில்லாதவள். பல்வேறு பள்ளிகளிலிருந்து தடை செயப்பட்ட ஆர்தர் என்ற இளைஞன் அவளது வகுப்பில் சேரும்போது அவள் வாழ்க்கை மாறுகிறது. அவனது இளமைத் துடிப்பில் ஆச்சரியப்படும் சில்வியா அவனை காதலிக்கிறாள். ஆனால் ஆர்த்தருக்கு ஹீமோஃபீலியா என்ற தீவிரமான குறைபாடு உள்ளது.

மாலை 4.30 மணி | SO LONG MY SON | DI JIU TIAN CHANG | DIR: XIAOSHUAI WANG | CHINA| 2019 | 185'

சீனாவின் சமூக, அரசியல் மாற்றங்கள், எழுச்சிகளுக்கு நடுவில், இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. அதில் ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசு இறந்த பின் இரண்டு குடும்பங்களும் பிரிகின்றன. சீன தேசத்தின் அடையாளம் மாற மாற விதி வசத்தால் இவர்கள் வாழ்க்கையும் மாறுகின்றன. கடைசியில் இறந்து போன மகனைப் பற்றிய உண்மை இவர்களை என்ன செய்தது?

மாலை 7.00 மணி | CHARCOAL | KOMUR | DIR: ESMAEEL MONSEF | IRAN / 2019 | 90'

ஈரானிய மாகாணமான அஜர்பைஜானில் ஒரு எல்லை கிராமத்தில் கரி தயாரிக்கும் கெய்ராட்டின் கதையை சார்க்கோல் விவரிக்கிறது. கிராமப்புற வடமேற்கு ஈரான் பகுதியான அந்த மாகாணத்தில் தனது தொழிலே மூச்சென வாழும் அவர் நிறைய அவமானங்களை சந்திக்கிறார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டு, அஜர்பைஜானுக்குத் தப்பித்தபின் ஒரு துன்பகரமான சுழலுக்குள் தள்ளப்படுகிறார்.

SCROLL FOR NEXT