சினிமா

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.16 | படக்குறிப்புகள்

செய்திப்பிரிவு

காலை 9.30 மணி | NETAJI | DIR: VIJEESHANI | IRULA | 2019 | 82'

நேதாஜி, அல்லது நேதாஜி கோபாலகிருஷ்ணன், 92 இவர் கேரளாவில் இருளர் பழங்குடியினருடன் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் பின்பற்றும் ஒரு தொண்டர். நேதாஜியின் மகனும், மருமகளும் தங்கள் மகன் விராட்டை அவருடன் ஒரு பதினைந்து நாட்கள் விட்டுச் செல்லும்போது, நகரத்தில் வளர்ந்த அச் சிறுவனுக்கு காட்டில் உள்ள வாழ்க்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அச்சிறுவன் காட்டில் தொலைந்து போகிறான். எங்கெங்கோ அலையும்போததான் வாழ்க்கையில் போராட்டம், பயம், நம்பிக்கை மற்றும் சுய பராமரிப்பு போன்றவற்றின் அர்த்தங்களை விராட் எனும் அச்சிறுவன் புரிந்துகொள்கிறான்.

பகல் 12.00 மணி | KOLAAMBI | DIR: T.K.RAJEEV KUMAR | MALAYALAM | 2019 | 130'

ஒரு இளம் பெண் கலைஞர் கலைக் கண்காட்சியில் தனது கலைப்படைப்புகளை நிறுவுவதற்காக வருகிறாள். கொச்சியில் ஒரு வயதான தம்பதிகளை சந்திக்கிறாள். அவர்கள் எல்.பி.ரிக்கார்டுகள் மூலம் லவுட்ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கச்செய்தவர்கள். ஆனால் அவர்களது லவுட்ஸ்பீக்கர் ஒலிபெருக்கிகளுக்கு தடை வரவே அவர்கள் வாழ்க்கை சற்றே பின்னடைவு காண்கிறது. இந்நிலையில்தான் கொச்சி வரும் இளம் பெண் கலைஞர் அந்த வயதான தம்பதிகளை தற்செயலாய் சந்திக்கும்போது அவர்கள் வாழ்வில் எத்தகைய மகிழ்ச்சிகளை அப்பெண் உருவாக்குகிறாள் என்பதை கொலாம்பி எடுத்துக்காட்டுகிறது.

மாலை 3.00 மணி |

தமிழ்த் திரைப்படம்: பிழை


மாலை 6.00 மணி

தமிழ்த் திரைப்படம்: சீதக்காதி

SCROLL FOR NEXT