சினிமா

சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.15 | படக்குறிப்புகள்

செய்திப்பிரிவு


பிற்பகல் 2.00 மணி | SEX WEATHER / SEX WEATHER | DIR: JON GARCIA | USA | 2018 | 89'

சிட்னியும் டாரலும் குறைந்த பட்ஜெட்டில் சுயாதீன திரைப்பட தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும்போது சந்தித்துக்கொள்கின்றனர். வேலைகளுக்கிடையே அவர்களது நட்பும் வளர்கிறது. இருப்பினும், அவர்களின் பல்வேறு வேலைகள் காரணமாக காதல் ஒருபோதும் மலர வாய்ப்பில்லை. பட வேலைகள் முடிந்ததும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளின்போதும் பிரீமியர் காட்சிக் கொண்டாட்டத்தின்போதும் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போதாவது அவர்கள் தங்கள் மனதில் மறைத்துவைத்திருந்த காதலை வெளிப்படுத்திக்கொண்டார்களா?


மாலை 4.00 மணி | ESCAPADA / ESCAPADA | DIR: SARAH HIRTT | BELGIUM | 2018 | 89'

பரம்பரை சொத்தைப் பற்றி முடிவெடுக்க வாழ்க்கை தரும் இடர்களால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் ஸ்பெயனில் ஒன்று கூடுகின்றனர். திவால் ஆகும் நிலையில் இருக்கும் குஸ்தாவ், அராஜகவாதத்தை ஆதரிக்கும் ஜூல்ஸ், இந்த இரண்டு சகோதரர்களுக்கு நடுவில், மாட்டிக்கொள்ளும், வாழ்க்கையில் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சகோதரி லூ. ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கை மீது வித்தியாசமான பார்வை இருக்கிறது. இந்த சொத்தை வைத்து தனிப்பட்ட முறையில் திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்கள் பல குடும்ப சண்டைகளை மீண்டும் கொண்டு வருகிறது.

மாலை 7.00 மணி |THE WARDEN / SORKPOUST | DIR: NIMA JAVIDI | IRAN | 2019 | 90'

1960களில் ஷா ஆட்சியின் காலக்கட்டம். நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைகிறது. அதற்கான ஓடுபாதை விமான நிலையத்திற்கு அதேநிலத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சிறைச்சாலையை இடித்துத் தள்ள திட்டம் உருவாகிறது. இதனால் அங்குள்ள சிறைக்கைதிகள் தெற்கு ஈரானில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேலைகள் நடக்கின்ன. சிறைச்சாலையின் வார்டனான மேஜர் ஜாகேத், கைதிகளை புதிய சிறைக்கு மாற்றும் பொறுப்பை ஏற்கிறார். அவரையே ஏமாற்றிவிட்டு மரணத் தண்டனை கைதி ஒருவன் எப்படித் தப்பிக்கிறான்? இப்பிரச்சினை காவல்துறையின் செயல்பாட்டின் அவசரத்தை கோருகிறது.

SCROLL FOR NEXT