சினிமா

சென்னை திரைப்பட விழா | கேஸினோ | ஜன.5 | படக்குறிப்புகள்

செய்திப்பிரிவு

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.5) கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி > VENTOUX | DIR: NICOLE VAN KILSDONK | NETHERLANDS | 2015 | 104'

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள், அவர்களின் இணை பிரியா இன்னொரு நண்பர் வெண்டாக்ஸ் மலை. அந்த மலையில் அவர்கள் இளவயதில் ஏறி விளையாடியது பழகியது பேசியது எல்லாம்நினைவுக்கு வர அவர்கள் மீண்டும் சந்தித்து தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த அந்த மலைக்குச் செல்கிறார்கள்.

காலை 12.00 மணி THE PLANTS | DIR: ROBERTO DOVERIS | CHILE | 2015 | 90'

இளம்பெண் பிளாரன்சியா செயலிழந்து, இயக்கமற்று இருக்கும் தனது அண்ணனை முழுதும் கவனித்துக் கொள்கிறார். இவரது தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது அண்ணனுக்காக வாழ்நாள் முழுதும் செலவிட்டாலும் பதின்ம வயதான பிளாரன்சியாவின் பாலியல் உணர்வுகளும் தலைதூக்குகிறது. ஆன்லைன் அன்னியர்களிடம் இவள் தனது பாலியல் உணர்வுகளுக்கான அடைக்கலத்தை நாடுகிறாள்.

காமிக் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுடைய பிளாரன்சியா 'தி பிளாண்ட்ஸ்' என்ற புத்தகத்தை வாசிக்கிறாள். இந்த காமிக் கதையில் நடு இரவில் தாவரங்களின் ஆத்மாக்கள் மனிதர்களாக உருமாறும். தாவரங்கள் உயிர்பெறும் இந்த காமிக் கதை மூலம் தாவரமாக இருக்கும் தன் சகோதரனை அவரது ஆழ்மன பிரக்ஞையைத் தூண்டி செயலுக்குக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறாள். அதன் பிறகு கதை கற்பனைக்கும் நடப்புக்கும் இடையே குழப்பம் விளைவிக்கும் காட்சிப்பதிவுகளுடன் நகர்கிறது... சர்ரியலான இந்தப் படத்தின் இயக்குநர் ரொபர்ட்டோ டோவரிஸ்.

மதியம் 2.30 மணி CLASH | DIR: MOHAMED DIAB | EGYPT | 2016 | 110'

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் உறுப்பினரான மொஹமத் மோர்சி அந்நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து 2013ல் ஜூலை 3 அன்று அகற்றப்பட்டதை எதிர்த்து மக்கள் வெள்ளமென திரண்டனர். போலீஸார் அங்கு உருவான கலகத்தை அடக்குகிறார்கள். எகிப்து அரசியலில் தொடர்ந்து பிரச்சனையாகிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கேள்விப்படுத்தும் இத்திரைப்படம் ஒரு துணிச்சலான முயற்சி என்று இயக்குநர் மொஹமத் தீயெப்புக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்த படம். 2016ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் தேர்வான இப்படம் 2016ல் ஆஸ்கருக்கு நுழையும் தகுதியைப் பெற்றது.

SCROLL FOR NEXT