காலை 10.00 மணி | PADMAAVAT | DIR: SANJAY LEELA BHANSALI | HINDI | 2018 | 164'
ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதிக்கும் ரஜபுத் அரசின் மேவார் மாகாண சிற்றரசர் ராணா ராவல் ரத்தன் சிங்குக்கும் இடையிலான காதல் மற்றும் தியாகத்தின் பிரதிபிம்பமாக அமைந்த படம். அவர்கள் காதல் வாழ்க்கையில் எந்த சிக்கலுமில்லை, அலாவுதீன் கில்ஜியின் கண்கள் பத்மாவதியின்மேல் விழும்வரை.
கில்ஜி வம்சத்தின் கொடூர அரசர்களில் ஒருவனான அலாவுதீன் கில்ஜி சொந்த சகோதரர்கள், மாமனார், சித்தப்பாக்கள் உள்ளிட்ட பலவரையும் கொன்றுவிட்டு அரியணை ஏறியவன். நிலத்தையும் பெண்களையும் கைப்பற்றுவதற்காகவே அவன் அவன் படையெடுத்துத் தாக்குபவன். அவ்வகையிலேயே அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை தன் வசமாக்கிக்கொள்ள திட்டமிட்டு ராஜா ரதன் சிங் ஆண்டு வந்த சித்தொர்கர் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்கிறான். கொஞ்சம் வரலாறும் நிறைய புனைவுகளும் கலந்த கதை நிறைய சர்ச்சைகளையும் தடைகளையும் சந்தித்தது.
பகல் 1.30 மணி | FROM 1.30 TO 2.30 PM
இயக்குநர் வெற்றிமாறன் கலந்துரையாடல்
> மாலை 3.00 மணி | அண்ணணுக்கு ஜே தமிழ்த் திரைப்படம்.
> மாலை 6.00 மணி ராட்சஸன் தமிழ்த் திரைப்படம்.