|சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 17-ம் தேதி அண்ணா திரையரங்கில் மாலை 4:30 மணிக்கு திரையிடப்பட்ட படத்தின் விமர்சனம்|
நார்வே நாட்டில் வசிக்கும், ஒரு கட்டுப்பாடான பாகிஸ்தானிய குடும்பத்தில் பிறந்த இளம்பெண் கலாச்சார பன்முகத்தன்மையினால் சீரழியும் அவளது வாழ்க்கையை நினைத்து வருந்தும் தந்தையின் கதைதான் 'வாட் வில் பீப்பிள் சே' (What People Will Say). நார்வே படமாக இருந்தாலும், பாகிஸ்தான் தொடர்பு (பெரும்பாலானவை ராஜஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டவை), அவர்கள் பேசும் இந்தி மொழி, நடித்திருக்கும் இந்திய நடிகர்கள்... இவை ஒரு உலக சினிமாவை தாண்டி, நம்மில் ஒரு நேரடியான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
தந்தை (மிர்சா) ஒரு செல்வாக்கு மிக்க வர்த்தகர். கூச்ச சுபாபமுடைய தாய். பொறுப்பான அண்ணன் மற்றும் சிறு தங்கை. நிஷா.. பார்ட்டி, மது, புகை என நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டு, வீட்டில் தந்தைக்கு பிடித்த சொல்பேச்சு கேட்கும் குழந்தை போல் நடிக்கிறாள். கள்ளத்தனமாக வீட்டில் நுழைந்த காதலனை கண்டறிந்த தந்தை அவனை அடித்து வெளியே துரத்துகிறார்.
| தவறவிடாதீர்கள்: இன்று, கேஸினோ, பிற்பகல் 2.45 காட்சி |
நண்பர்கள் ஆலோசனையில் குழந்தை நல காப்பகத்தில் இருக்கும் நிஷாவை ஏமாற்றி தந்தை தமது சொந்த ஊரான பகிஸ்தானிற்கு கூட்டி செல்கிறார். அங்கு தனது அத்தையின் கண்டிப்பான அரவணைப்பில் வளர்கிறாள். பலமுறை தப்பிக்க முயற்சித்தும் பலனில்லாததால், புதிய வாழ்க்கையை வாழ தொடங்குகிறாள். சொகுசான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, எளிமையான வாழ்வு அவளுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுகிறது. புதிய தருணங்கள் விடிந்த பொழுதும், மீண்டும் ஒரு கொடூரத் துயர சம்பவத்தினால் நாடு திரும்புகிறாள். மேலும் என்ன என்ன அவள் வாழ்க்கையில் எதிர்கொள்கிறாள் என்பது தான் கதை.
தந்தைக்காக மகள் செய்ய்யும் தியாகமும், பல அவமானங்களை கடந்தும் மகளின் மீது இடைவிடாத தந்தையின் பாசத்தையும் நிறுத்தி நிதானமான ஷாட்டில், மெல்லிய இசையுடன் பார்வையாளர்களுக்கு உணர்ச்சியை பரிமாறுகிறது.
இப்படத்தில் தந்தையாக நடித்திருப்பது இந்தியாவை சேர்ந்த அதில் ஹுசைன். இவர் இப்படத்திற்க்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், நார்வே நாட்டின் ' சிறந்த பிறமொழிக்கன படம்' என்ற அடிப்படையில் 91வது ஆஸ்கர் விருது விழாவிற்கு தேர்வாகியுள்ளது. மறு திரையிடலில் தவறவிடாதீர்கள்.
- சுப்ரமணி