சினிமா

சென்னை பட விழா | தேவி | டிசம்.14 | படக்குறிப்புகள்

செய்திப்பிரிவு

காலை 11.00 மணி | GANGSTA / PATSER   | DIR: ADIL EL ARBI, BILALL FALLAH | BELGIUM  | 2018 | 125'

நான்கு நண்பர்கள் சுயசம்பாத்தியத்தில் துணிச்சலோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை மிகவும் விபரீதமானது. என்றாலும் நாளொரு ஆட்டம் பொழுதொரு பாட்டுமாக அவர்களது இளமைக்காலத்திற்கே உண்டான கொண்டாட்டங்கள் அமைகின்றன. திடீரென அவர்களுக்கு எதிர்பாராத சோதனைகள் ஏற்படுகின்றன. வியாபாரத்தில் போதைப் பொருட்கள் கடத்தலின்போது சிக்கலாகிறது. நிலைமை அவர்களது கையை விட்டு போகிறது. அவர்களிடையே பெரும் விரிசலும் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை பரப்பரப்பான கதை நகர்வுடன் செல்கிறது கேங்ஸ்டா.

படத்தின் ட்ரெய்லர்:

பிற்பகல் 2.00 மணி | ARRHYTHMIA / ARITMIYA  | DIR: BORIS KHLEBNIKOV | RUSSIA / FINLAND / GERMANY  | 2017 | 116'

முப்பது வயதை நெருங்கும் நாயகன் ஒலெக் (Oleg) ஒரு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளனாகப் பணிபுரிகிறான். வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் அவனுக்கு மனைவியாய் வாய்க்கிறாள் கட்யா ( Katya ). கட்யா ஒரு மருத்துவர். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிகிறாள். நாயகனுக்கு தினமும் பரபரப்பு, டென்ஷனாய் நகரும் வேலை. எனவே, டென்ஷனிலிருந்து இளைப்பாறுவதற்காக இரவுகளில் மதுவை நாடுகிறான். அவன் செயல்பாடுகள் கட்யாவுக்கு வருத்தத்தைத் தருகின்றன. குடும்பத்தில் அவனது பொறுப்பற்றத் தன்மையும், குடிப் பழக்கமும் இருவருக்கிடையே இடைவெளியை உண்டாக்குகிறது. விரிசல் பெரிதாக, அவன் மீது காட்டும் அன்பு அரிதாகிறது. விவாகரத்து கோருகிறாள் கட்யா. தவித்துப் போகிறான் நாயகன். இதுபோக, வேலை செய்யும் இடத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பாதகமான சூழல். வேலை போனால் வேறோரு வேலை. ஆனால், தான் நேசிக்கும் மனைவிக்கு மாற்று ஏது? பலரைக் காப்பாற்றிய நாயகன், மனம் வாடிப் போவானா? அவளால் மீண்டெழுவானா?

படத்தின் ட்ரெய்லர்:

மாலை 4.30 மணி | BREATH  | DIR: SIMON BAKER  | AUSTRALIA | 2017 | 115'

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் டிம் விண்டோனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 70களில் ஆஸ்திரேலியாவின் கடலோரப் பிரதேசம். பதின்ம வயது இளைஞர்கள் இருவர் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டுமென்ற வேட்கை கொண்டவர்கள். கடலுக்குள் செல்லும் மர்மங்கள் நிறைந்த பழைய சாதனையாளர் ஒருவருடன் அவர்களுக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த இளைஞர்களை ஆபத்துநிறைந்த பாதைக்கு அவர் தூண்டிவிடுகிறார். தங்கள் வாழ்க்கையில் என்றென்றும் மீளமுடியாத நிலைக்கு அவர்கள் செல்கிறார்கள். டொராண்டோ மற்றும் ஜூரிச் திரைப்பட விழாக்களில் பிரீமியர் காட்சியாகத் திரையிடப்பட்டது.

படத்தின் ட்ரெய்லர்:

மாலை 7.00 மணி | IN THE FADE / AUS DEAM NICHTS | DIR: FAITH AKIN | GERMANY  |  2017 | 106'

குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றினால் கத்ஜாவின் வாழ்க்கையே மாறி போகிறது. கணவன் மற்றும் மகனை அவர் பறிகொடுத்து விடுகிறார். இந்த வேதனையுடன் வாழ்க்கையை நகர்த்தும் அவர் ஒருகட்டத்தில் கோபமாகிறார். பழிவாங்குகிறார். எப்படி என்பது தான் கதை. கேன்ஸ் திரைவிழாவில் இப்படத்தில் நடித்த நடிகை டியானே குருகெருக்கு சிறந்த நடிகைக்காக விருது கிடைத்தது. மட்டுமின்றி இயக்குநருக்கு சிறந்த இயக்குநருக்கான பாம் டி ஓர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

படத்தின் ட்ரெய்லர்:

In The Fade
SCROLL FOR NEXT