சினிமா

விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ டீசர் எப்படி? - காதலும், பிரிவும்! 

செய்திப்பிரிவு

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி, ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி?: கிட்டத்தட்ட அதர்வாவின் உடல்மொழியையும், குரலையும் நினைவூட்டுகிறார் அவரது தம்பி ஆகாஷ் முரளி. முழுப்படமும் காதலை மையமாக கொண்டு உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. அதீத மேக்அப் தாண்டி அதிதி ஷங்கர் கவனம் ஈர்க்கிறார். “என் பிரண்ட்ஸ் எல்லோரும் மன நோயாளிகள் தான்” என்ற வசனம் நெருடல். வழக்கமான காதலும், தொடர்ந்து வரும் ஆக்ஷனும், பிரிவும், வெளிநாடு ஸ்டன்ட் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளன. சரத்குமார், குஷ்பூ ஒரு ஃப்ரேமில் தலைகாட்டி செல்கின்றனர். டீசரில் புதிதாக எதையும் காண முடியவில்லை.

நேசிப்பாயா: மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அட்வென்சர் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT