சினிமா

12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட கமலின் ‘இந்தியன் 2’ - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ல் வெளியானது ‘இந்தியன்’. இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் உருவாகியுள்ளது. சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் நீளத்தை முன்வைத்து ரசிகர்கள் விமர்சித்தனர். இதன் காரணமாக 180 நிமிடங்கள் நீளம் கொண்ட ‘இந்தியன் 2’ படத்தில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த புதிய பதிப்பு இன்று முதல் திரையிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT