வேலை வாய்ப்பு

குருப்-2 காலிப்பணியிடங்கள் 1,270 ஆக அதிகரிப்பு: எண்ணிக்கை மேலும் உயரும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்-2 தேர்வில் தற்போது கூடுதலாக 625 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குருப்-2, மற்றும் 2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

தற்போது 625 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை வெளியிடப்பட் டுள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணி யிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆகும்.

அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களிட மிருந்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் அதிகரிக் கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய பதவிகள் சேர்ப்பு:

குருப்-2 மற்றும் 2-ஏ முதல் நிலைத்தேர்வு கடந்த செப்.28-ம்தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 53 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு டிசம்பரில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாக 625 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டின்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிப்பின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், பால்வளத்துறை முதுநிலை ஆய்வாளர், உதவியாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை திருத்தியமைக் கப்பட்டுள்ளது.

அதேபோல், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் (கிரேடு-2), கணக்கு மற்றும் கருவூலத்துறை கணக்காளர், தலைமைச் செயலக உதவியாளர் உள்ளிட்ட புதிய பதவிகளிலும் காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT