கோப்புப்படம்
சென்னை: கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பாக டிச.20-ம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்ய உள்ளன.
முகாமில் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை வேலை நாடுபவர்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.