வேலை வாய்ப்பு

மின்வாரிய கள உதவியாளர் பதவிக்கான உடற்தகுதித் தேர்வு: தகுதி பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் (ஐடிஐ கிரேடு-3) அடங்​கிய தமிழ்​நாடு மின்​பகிர்​மான கழக கள உதவி​யாளர் பதவிக்​கான உடற்​தகு​தித் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

உடற்தகுதித் தேர்வு நடை​பெறும் நாள், நேரம் தொடர்​பான விவரங்​கள் இணை​யதளத்​தின் மூலம் அறிவிக்​கப்​படும். இத்​தேர்​வுக்கு அழைக்​கப்​படும் அனை​வரும் அசல் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அனு​ம​திக்​கப்​பட்டு பணிக்கு தேர்​வுசெய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது.இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT