பழங்​குடி​யினர் நலத்​துறை​யும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக​மும் இணைந்து பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கு கனரக மற்​றும்​ இலகுரக வாக​ன ஓட்​டுநர்​ பயிற்​சி அளிக்​கப்​பட்​டது.

 
வேலை வாய்ப்பு

உடனடி வேலைவாய்ப்பு தரும் வகையில் 33 பழங்குடியின இளைஞர்களுக்கு கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: பழங்​குடி​யினர் நலத்​துறை​யும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக​மும் இணைந்து உடனடி வேலை​வாய்ப்பு தரக்​கூடிய வகை​யில் 33 பழங்​குடி​யின இளைஞர்​களுக்கு ஓட்​டுநர் பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தின் பழங்​குடி​யின இளைஞர்​கள் எதிர்​கொள்​ளும் வேலை​வாய்ப்​புச் சவால்​கள், வெறும் கல்​விப் பற்​றாக்​குறை​யால் மட்​டும் உரு​வானவை அல்ல. அவர்​களின் வசிப்​பிடங்​கள் அமைந்​துள்ள புவி​யியல் சூழல், போதிய தொழில்​முறைத் தொடர்​பு​கள் இல்​லாமை மற்​றும் பொருளா​தா​ரத் தடைகள் அவர்​களை முறை​யான வேலை​வாய்ப்பு கிடைக்​காத நிலை​யில் வைத்​துள்​ளது.

          

இந்​நிலை​யில் தமிழ்​நாடு பழங்​குடி​யினர் நலத்​ துறை​யும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக​மும் இணைந்து கனரக மற்​றும் இலகுரக வாகன ஓட்​டுநர் பயிற்​சித் திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறது.

இது​போன்ற திட்​டங்​கள் குறித்த விழிப்​புணர்வு இல்​லாத​தா​லும் முறை​யான பயிற்சி மையங்​களை அணுக முடி​யாத வசிப்​பிட தூரம் காரண​மாக​வும் பழங்​குடி​யின இளைஞர்​களின் பங்​கேற்பு பெரிய அளவில் இல்​லாத நிலை இருந்து வந்​தது.

இந்த இடைவெளியை குறைக்​கும் வகை​யில் விழிப்​புணர்வு - பயிற்சி - சான்​றிதழ் - வேலை​வாய்ப்பு என ஒரே கட்​டமைப்​பில் ஒரு திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. இதற்​காக பழங்​குடி​யின குடி​யிருப்​பு​களில் நடத்​தப்​பட்ட சிறப்பு முகாம்​கள் மூலம் சந்தை நில​வரம் ஆய்வு செய்​யப்​பட்​டு, உடனடி வேலை​வாய்ப்​பைத் தரக்​கூடிய ஓட்​டுநர் பயிற்​சித் துறை தேர்வு செய்​யப்​பட்​டது.

இதன்​படி முதற்​கட்​ட​மாக 15 பழங்​குடி​யின இளைஞர்​களுக்​குக் கனரக வாகனப் பயிற்​சி​யும், 18 பேருக்கு இலகுரக வாகனப் பயிற்​சி​யும் வழங்​கப்​பட்​டன.

பாது​காப்​பான வேலை​வாய்ப்​பு

இலகுரக வாகன ஓட்​டுநர் உரிமம் பெற்று ஓராண்டு அனுபவம் பெறும் இளைஞர்​கள், அதனைத் தொடர்ந்து கனரக வாக​னப் பயிற்​சி​யில் இணைந்து தங்​களை மேம்​படுத்​திக்​கொள்​ளும் வகை​யில் இந்த திட்​டம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு பெறப்​படும் முறை​யான சான்​றிதழ்​கள், அரசு மற்​றும் தனி​யார் துறை​களில் அவர்​களுக்​குப் பாது​காப்​பான வேலை​வாய்ப்​பு​களை உறுதி செய்​யும். குறிப்​பாக, இத்​துறை​யில் பழங்​குடி​யினப் பெண்​களும் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றுள்​ளது சிறப்பு அம்​ச​மாகும்.

இப்​ப​யிற்​சி​யானது ஒரு முழு​மை​யான தொழில்​முறைப் பயண​மாக மாற்​று​வதுடன் சாலைப் பாது​காப்பு மற்​றும் வாக​னப் பராமரிப்பு குறித்த விளக்​கங்​கள் முதல் நேரடி நடை​முறைப் பயிற்​சி, திறன் மதிப்​பீடு, சான்​றிதழ் மற்​றும் ஓட்​டுநர் உரிமம் பெற்​றுத் தரு​வது வரை அனைத்​தும் ஒருங்​கிணைந்த முறை​யில் வழங்​கு​வதே இத்​திட்​டத்​தின் தனித்​து​வ​மாகும்.

இது அவர்​களின் பொருளா​தா​ரச் சுதந்​திரத்​தை​யும் சமூக மாற்​றத்​தை​யும் ஒருசேர உறுதி செய்ய வழி​வகுக்​கிறது. பழங்​குடி​யின இளைஞர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள இந்​தத் திறன் பயிற்​சி, அவர்​களைச் சுய​சார்பு கொண்​ட​வர்​களாக மாற்​றும் நிலை​யான வாழ்​வா​தா​ரப் பாதை​யாகும். திறன் பயிற்​சி​யைக் கடைக்​கோடி மனிதர்​களுக்​கும் கொண்டு செல்​லும் வகையி​லான அரசின் இத்​தகைய முயற்​சிகள், சமூகச் சமத்​து​வத்தை உரு​வாக்​கும் என பழங்​குடி​யின நலத்​துறை வட்​டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.

SCROLL FOR NEXT