வேலை வாய்ப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.8-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: குரூப்-4 தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நவம்​பர் 8-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

கிராம நிர்​வாக அலு​வலர், இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர், வரு​வாய் உதவி​யாளர், வரித் தண்​டலர் உள்பட பல்​வேறு பதவி​களில் 6,574 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி கடந்த அக்​டோபர் 6-ம் தேதி வெளி​யிட்​டது.

ஆன்​லைன் விண்​ணப்ப பதி​வும் அன்​றைய தினமே தொடங்​கியது. இது​வரை 11 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதற்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் இன்​றுடன்​(நவ.5) நிறைவடை​யும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், பல்​வேறு தரப்​பினரின் கோரிக்​கையை ஏற்று விண்​ணப்​பிக்​கும் அவகாசத்தை நவம்​பர் 8-ம் தேதி வரை நீட்​டித்து டிஎன்​பிஎஸ்சி உத்​தர​விட்​டுள்​ளது.

எனவே, குரூப்-4 தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் டிஎன்​பிஎஸ்சி இணை​யதளம் (www.tnpsc.gov.in) வாயி​லாக துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும் எனவும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. குரூப்-4 எழுத்​துத்​தேர்வு 2027 ஜனவரி 10-ம் தேதி நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT