வேலை வாய்ப்பு

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிக்கான தேர்வுக்கு மே 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம், துறைகள், அமைப்புகளில் குரூப்- பி, குரூப்-சி பதவிகளை நிரப்ப, பட்டப் படிப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட போட்டி தேர்வை, பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான விரிவான அறிவிப்பு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே 3-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மே 5-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஜூலை மாதம் நடக்கிறது. புதுவையில் ஒரு மையத்திலும், தமிழகத்தில் 7, தெலங்கானாவில் 3, ஆந்திராவில் 10 மையங்களிலும் என மொத்தம் 21 மையங்களில் தேர்வு நடக்கிறது. வேலை வாய்ப்பு தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT